நீங்கள் பயன்படுத்தும் USB Pendrive-ன் நிறைய தகவல்களை பதிந்து வைத்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், எளிதான வழியாக இருப்பதும் இந்த பென்டிரைவ் தான்.

எனவே இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
இம்மென்பொருளை தரவிறக்க சுட்டி
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar -ல் USB alert செய்திப்படம் காட்டும்.

வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.
ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
நன்றி..!