பிட்காயின்ஸ் (Bitcoins)

பிட்காயின்ஸ்

                   பிட்காயின்ஸ்(Bitcoins) என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம் (virtual currency) ஆகும். அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது. பிட்காயின்ஸ்(Bitcoins) மூலம் பரிவர்த்தனை செய்வதர்க்கு முக்கியமான சில காரணம் உள்ளன.
           1.பிட்காயின் மூலம் பரிமாற்றம் செய்பவர்களை Trace செய்ய இயலாது.
           2. பிட்காயினை கண்டிப்பாக வங்கியில் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
           3. டிஜிட்டல் வடிவ நாணயம் என்பதால் பாதுகாப்பு அதிகம்.


உருவாக்கம்

முதல் பிட்காயின்(Bitcoin)  மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது. தன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா (Satoshi Nakamoto) என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது. அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.

பிட்காயின் அச்சிடுவது

வங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன (அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்).
மாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது. அக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். பிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு “வெட்டி” எடுக்கப்படுகின்றது.
மறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.

எனவே நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் உருவாக்க முடியாது?

பிட்காயின் நெறிமுறை (protocol)

                                    பிட்காயின் நெறிமுறை (protocol) – பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் – 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இவை சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது “சடோஷி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அடிப்படை

 வழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில் தயாரிக்கப்படும். நாம் பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை) ஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
பிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.
திறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.



Post a Comment

Previous Post Next Post