How to Hide Photos & Videos Without apps in Android
ஆன்ட்ராய்ட் மொபைலில் உள்ள Photos மற்றும் video களை மறைக்க (Hide)
பல அப்ளிகேசனை (Application) பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு சிறிய முறையை
பயன்படுத்தி எந்த ஒரு அப்ளிகேசனையும் (Application) பயன்படுத்தாமல் மறைக்க
முடியும்.
கீழே உள்ள முறையை பயன்படுத்தி Photos மற்றும் video களை மறைக்கலாம்.
வழிமுறை:
1. முதலில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் File
manager or file browser ஐ open செய்யவும்.
2. நீங்கள் மறைக்க (Hide) செய்யவேண்டிய Photos
மற்றும் video களை ஏதேனும் ஒரு folderல் move செய்து அந்த Folderக்கு புள்ளி (.)
வைத்து ஏதேனும் ஒரு பெயரிட்டு save செய்யவும். Ex (.hide)
3. இப்பொழுது .hide ல் உள்ள Photos மற்றும் video
ஆனது Galleryல் தெரியாது.
காரணம்:
ஆன்ட்ராய்டு இயங்குதளமானது ( Android Operating
System) பயனருக்கு (User) தேவையில்லாத ஆனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்திற்கு
பயன்படுத்தக் கூடிய அப்ளிகேசன்(Application) File களை புள்ளி(.) வைத்த Folderகளில்
save செய்து வைத்திருக்கும். Folderகளின் முன் புள்ளி(.) இருந்தால் அதனை gallery
ல் தெரியாதவாறு ஆன்ட்ராய்டு இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தான் நாம்
உருவாக்கிய .hide Folder ஆனது Galleryல் தெரிவதில்லை
குறிப்பு:
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ( Android Operating System) Folder உருவாக்க அதிகப்படியான நிபந்தனைகள் இல்லை. ஆன்ட்ராய்டில்(Android) நாம் Folder பெயர்களில் சிறப்பு குறியீடுகளை(Special Characters) கூட பயன்படுத்தலாம்(@#$%^&*(*(%#).
ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் Comment ல் குறிப்பிடவும்.
Tags:
Android