வைரஸிற்கு ஆப்பு வைப்பது எப்படி?

முதலில் உங்கள் கணினியின் Desktop ல் Flash எனும் பெயரில் அல்லது உங்கள் பெயரில் Folder அதன்பின் நீங்கள் Shift key ஐ அழுத்திக் கொண்டு Flash அல்லது Momory Card ஐ கணினியில் இணைக்க வேண்டும்.(வைரஸ் தானாக பரவாமல் தடுக்க..)

My Computer ல் Right Click செய்ய வரும் Window ல் Manage ல் Click செய்ய Computer Management வரும். அதில் Disk Management ஐ தெரிவுசெய்தால் உங்கள் கணினியில் இருக்கும் Drive கள் தோன்றும். அதில் உங்கள் Flash ஐ Right Click செய்ய வரும் Window ல் Change Drive Letter and Paths ல் Click செய்ய வரும் Window ல் Remove எனும் Button ஐ Click பண்ணியபின் வரும் Confirm Message Box ல் Yes ஐ தெரிவு செய்யுங்கள்.

அதன் திருப்ப உங்கள் Flash I Right Click செய்து Change Drive Letter and Paths ல் Click செய்து பின் Add எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் Mount in the following empty NTFS folder ஐ தெரிவு செய்தபின் Browse ஐ Click பண்ணுங்கள். அதன்பின் தோன்றும் Window ல் நீங்கள் Desktop ல் உருவாக்கிய Folder ஐ தெரிவு செய்யுங்கள். பின் OK ஐ click பண்ணுங்கள். இப்போது உங்கள் கணினியின் My Computer ல் இருந்து உங்கள் Flash மறைந்துவிடும். Desktop ல் நீங்கள் உருவாக்கிய Folder உங்கள் Flash ஆக மாறிவிடும்.

உங்கள் Flash ல் வைரஸ் இருந்தால் உங்கள் Flash ஐ உங்கள் கணியுடன் இணைக்கும் போது Auto வாக உங்கள் கணினிக்கு வைரஸ் வராது தடுக்கப்படும். அதேபோல் உங்கள் கணினியில் வைரஸ் இருந்தால் கணினியின் My Computer ல் Flash இல்லாததால் Flash ற்கு வைரஸ் வராது தடுக்கப்படும். இதனால் Flash மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். உங்களுக்கும் Open செய்யவும் இலகுவாக இருக்கும். Open with பிரச்சனையும் வராது.

Post a Comment

Previous Post Next Post