13 இலக்க மொபைல் எண்: யாருடைய பயன்பாட்டிற்கு??


13 இலக்க மொபைல் எண்: யாருடைய பயன்பாட்டிற்கு??

வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் மொபைல் எண் அனைத்தும் 13 இலக்கங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு தற்போது பயன்பாட்டில் இருக்கும் 10 இலக்க மொபைல் எண்களும் 13 இலக்க எண்ணாக மாற்றப்பம் என தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்த விரிவான செய்தி...



மத்திய டெலிகாம் துறை சார்பில் ஐடி நிறுவனக்களுக்கு 13 இலக்க மொபைல் எண்களை ஜூலை 1, 2018-க்குள் மாற்றம் செய்து அதனை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018-க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

ஆனால், இதில் சில செய்திகள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆம், 10 இலக்க எண் 13 இலக்க எண்ணாக மாற்றப்படுவது உண்மை, ஆனால், அவை மொபைல் போனில் உள்ள சிம் கார்ட்டுகளுக்கு அல்ல. Machine-to-Machine (M2M) தொலைத்தொடர்புக்கு மட்டுமே.

(M2M) தொடர்பு என்பது ஒரு தகவல்தொடர்பு முறையாகும். இந்த முறையானது நிறுவனத்தின் பிணைய சாதனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களை, மனிதர்களின் எந்த உதவியும் இல்லாமல் நிகழ்த்தும்.

இதன் மூலம் இந்த இலக்க எண் மாற்றங்கள் பொது மக்களுக்கானது அல்ல என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post