81 லட்சம் ஆதார் எண் முடக்கம் ..! உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? வழிமுறை என்ன ?


ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ?
நமது நாட்டில் மொத்தம் 81 லட்சம் ஆதார் கார்டுகள் தற்போது தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில் உங்களுடைய ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா என்பதனை அறிந்து கொள்ளுவது எவ்வாறு ? என தெரிந்து கொள்ளலாம்.




Step-1

முதலில் அதிகார்வப்பூர்வ ஆதார் இணையதளத்துக்கு https://uidai.gov.in/ செல்லுங்கள்..!



Step-2

ஆதார் இணையதளத்தில் உள்ள Verify Aadhaar Number அல்லது (ஆதார் எண் சரிபார்ப்பு) என்ற இணைப்பினை கிளிக் செய்யுங்கள்.



Step-3

திரையில் உள்ளதை போன்று ஆதார் எண்ணை உள்ளிட்டு பாதுகாப்பு சரிபார்ப்பு கோடினை Verify என க்ளிக் செய்யுங்கள்



Step-4

படத்தில் உள்ளதை போன்று பச்சை நிறத்தில் டிக் செய்து வந்தால் உங்கள் ஆதார் எண் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து கொள்ளுங்கள்.


ஆதார் பயன்பாட்டில் இல்லையா ?

உங்களுடைய ஆதார் கார்டினை தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அருகாமையில் உள்ள ஆதார் மையத்துக்கு சென்று உங்களுடைய பழைய எண்ணை கொண்டு மீண்டும் ஒரு முறை கண், கை ரேகை உள்ளிட்ட பையோ மெட்ரிக் சரிபார்த்து எண்ணை புதுப்பித்துக் கொள்ள ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post