ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் போன் இணைப்பை துண்டித்துவிடுவோம் என்று இனிமேல் செல்போன் நிறுவனங்கள் தொல்லை செய்யாத அளவுக்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமா என்பது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அரசியல் சாசன பெஞ்ச், தங்கள் இறுதி உத்தரவு வரும்வரை ஆதார் எண்களை கட்டாயப்படுத்த கூடாது என இன்று அறிவித்துள்ளது.
இதனால், வங்கி கணக்குகள், தட்கல் பாஸ்போர்ட்டுகள், செல்போன் எண்கள் போன்ற சேவைகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்தாக வேண்டிய கட்டாயம் இல்லை.
அதேநேரம், மானியம், பெறத்தேவையான திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு மார்ச் 31க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுகுறித்து, ஓமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டில், இமெயில், மெசேஜ்களை இனியும் செல்போன் நிறுவனங்களும், வங்கிகளும் அனுப்பாதீர்கள். தீர்ப்பு வரும்வரை நான் ஆதார் எண்ணை இணைக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
Dear HDFC, Airtel & others please stop spamming me with emails/messages now. I’m not linking anything to #Aadhaar until I absolutely have to.
Tags:
general